ஓசூர் ஆன்மீக குரு முரளி மோகன் குருஜி – இந்து ஜனசேனா அலுவலகத்திற்கு விஜயம்
சென்னை:
இந்து ஜனசேனா நிறுவனத் தலைவர் மற்றும் அதற்வன வேத ஆராய்ச்சியில் பல பி.எச்.டி பட்டங்களை பெற்றதோடு, பல சீடர்களை வழிநடத்தி மக்களின் துன்பங்களை போக்கி வந்துவரும் முரளி மோகன் குருஜி, ஓசூரில் ஜோதி பீடம் ஆசிரமத்தை நிறுவி ஆன்மீக குருவாக திகழ்ந்து வருகிறார்.
இவரது தலைமையில், இந்து சமய ஒற்றுமை மற்றும் சமூக முன்னேற்றம் குறித்த பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சென்னை இந்து ஜனசேனா அலுவலகத்திற்கு அவர் சமீபத்தில் விஜயம் செய்தார். அப்போது மாநில பொதுச் செயலாளர் தீபம் பா.சண்முகம் மரியாதையுடன் அவரை சந்தித்து, இந்து அமைப்புகள் மற்றும் இந்துக்களின் ஒற்றுமை குறித்து விவாதித்தார்.
இந்நிகழ்வில், ஆன்மீகப் பணிகள் குறித்து ஆலோசனைகள் இடம்பெற்றன.

