ரஷ்யாவில் 8.8 ரிக்டர் நிலநடுக்கம்
இந்தியாவுக்கு சுனாமி அபாயம் இல்லை – சுனாமி எச்சரிக்கை மையம் உறுதி
மாஸ்கோ/சென்னை:
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் அருகே இன்று அதிகாலை 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ரஷ்யா மற்றும் ஜப்பான் கடலோர பகுதிகளில் சுனாமி அபாயம் அதிகரித்துள்ளதால் அங்குள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய சுனாமி எச்சரிக்கை மையம், “இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கும், இந்தியப் பெருங்கடலுக்கும் எந்தவித சுனாமி அபாயமும் இல்லை” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், சூழ்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், மக்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை என்றும் மையம் தெரிவித்துள்ளது

