ஆலந்தூர், ஆக.31 – சென்னையை அடுத்த பரங்கிமலை ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் மத்திய குற்றப்பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்த சந்திரமோகன் (46) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரமோகனுக்கு மனைவி ஜெனிபர் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த வாரம் மனைவி, மகள்களுடன் சொந்த ஊரான கேரளா சென்றிருந்தனர். இதையடுத்து, முன்னொரு நாள் இரவு ஜெனிபர் கணவருக்கு பலமுறை தொலைபேசி செய்தும் பதில் வராததால் அக்கம் பக்கத்தினரிடம் தொடர்பு கொண்டு நிலை அறியச் சொல்லியுள்ளார்.
அதன்படி அண்டை வீட்டார் கதவைத் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சந்திரமோகன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தார். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பரங்கிமலை போலீசார் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

