திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை வளனார் தமிழ் பேரவை சார்பில் நடைபெற்ற தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது கண்காட்சியினை தமிழ் துறை தலைவர் ஜோசப் சகாயராஜ் முன்னிலையில்,கல்லூரி முதல்வர் அருள் முனைவர் மரிய தாஸ் தொடங்கி வைத்தார். கல்லூரி அதிபர் அருள் முனைவர் பவுல் மைக்கேல், செயலர் அருள் முனைவர் ஆரோக்கியசாமி சேவியர், துணை முதல்வர் குமார் , தேர்வு நெறியாளர் அலெக்ஸ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். புழங்கு பொருட்கள் சேகரிப்பாளர் பத்ரிநாராயணனா புல் புல் தாரா இசைக்கருவியை காட்சிப்படுத்தி இசைத்து காட்டுகையில் மாணவர்கள் இசையில் மூழ்கினார்கள். புல் புல் தாரா இசைக்கருவி குறித்து பேசுகையில்,
புல்புல் தாரா ஒரு கம்பி வாத்திய இசைக்கருவியாகும்.
புல் புல் தாரா, தட்டையான மரப் பெட்டியின் மீது, அதன் நீண்ட பகுதியிலிருந்து கம்பி போன்ற மெல்லிய தந்திகள் பொருத்தப்பட்டிருக்கும். தட்டச்சுப் பொறிகள் இருக்கும். மெலிஸ்மாடிக் இசையின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட இசைக்கருவி ஆகும். பழைய தமிழ் திரைப்படங்களில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது.புல்புல் தாரா இசைக்கருவியை மீட்டும் போது ஒரு கையில் தட்டச்சு பொறியை அழுத்தியும் மற்றொரு கையினால் நரம்பு கம்பியினை மீட்கவும் வேண்டும். இசை கருவியில் தட்டச்சுப்பொறி விசைகளை அழுத்தப்படும் போது அவற்றின் சுருதியை உயர்த்தவும் சரங்களை சுருக்கவும் வழிவகுக்கின்றன.
புல்புல்தாரா இசைக்கருவினை வாசிப்பது கடினம். புல்புல் தாரா பொதுவாக பாடுவதற்கு துணையாக இசைக்கப்படுகிறது. ஒரு தட்டச்சு பொறி அழுத்தப்படும்போது ஒவ்வொரு நாண் தேர்ந்தெடுக்கப்பட்டு இசையினை வழங்குகிறது என்றார்.பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர்கள் விஜயகுமார், முகமது சுபேர், சந்திரசேகரன், இளம்வழுதி உட்பட பலர் தனது சேகரிப்பினை காட்சி படுத்தி விளக்கினார்கள். கல்லூரி கல்விப்புல முதன்மையர், துறைத்தலைவர்கள் , பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், இளங்கலை முதுகலை மாணவ மாணவிகள் உட்பட பலர் கண்காட்சியினை பார்வையிட்டனர்.

