கடலூர், ஆக.31 –
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் வசித்து வந்த 18 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் அருகே உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்த அவர், அதே கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த ரெட்டிச்சாவடி பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவியுடன் நெருக்கமாக பழகி வந்தார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனவருத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 20 வயது மாணவி தனது தோழியை தொடர்பு கொண்டு, “என்னுடன் பேசாவிட்டால் நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்” என்று மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனால் மனமுடைந்த 18 வயது மாணவி, தன் வீட்டில் தூக்குப்போட்டு உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

