திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் பணத்தாள்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் முஹம்மது சுபேர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்திய பணத்தாள்களில் நட்சத்திரக் குறியீடு குறித்து சந்திரசேகரன் பேசுகையில், இந்திய ரூபாயினை இந்திய ரிசர்வ் வங்கி நிர்வகிக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி அச்சிடும் பணத்தாள்களில் குறைபாடு இருப்பின் பணத்தாளின் வரிசை எண் எழுதப்பட்டு, அதற்குப் பதிலாக வேறு ஒரு ரூபாய் அச்சிடப்படும், அச்சிடப்படும் ரூபாய் பணத்தாள் எண்ணிக்கை அப்படியே இருக்கும். பணத்தாள் அச்சிடுவதில் ஏற்படும் பிழைகளுக்கு மாற்றுக் குறிப்புகளாக * நட்சத்திரம் குறியீடு
பயன்படுத்தப்படுகின்றன முன்னொட்டுக்கும் வரிசை எண்ணுக்கும் இடையில் ஒரு * நட்சத்திரம் சேர்க்கப்படும் வரிசை எண்ணைத் தவிர மற்ற எல்லா வகையிலும் நட்சத்திரத் தொடர் குறிப்புகள் தற்போதுள்ள பணத்தாள் போலவே இருக்கும். உதாரணமாக 9AA*012345
வரிசை எண்ணில் ஒரு குறியீட்டுடன் மறுபதிப்பு செய்யப்படுகிறது, இது பிழைக் குறிப்பிற்கு மாற்றாக அடையாளப்படுத்தப்படுகிறது என்றார்.

