லட்சியம் படைப்பாளர் களம் சார்பில் சமூக செயற்பாட்டாளருக்கு லட்சியம் படைப்பாளர் விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. லட்சியம் படைப்பாளர் களம் நிறுவனர் சதாசிவம் தலைமை வகித்து பேசுகையில், லட்சியம் படைப்பாளர் களம் கற்றதையும் பெற்றதையும் மற்றவருக்கு வழங்கி அறிவுச்சுடர் ஏற்ற உள்ள களமாகும். வாழ்வியல் முன்னேற்றம் அனைவருக்கும் தேவை. ஒவ்வொருவருக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் லட்சியம் படைப்பாளர் களம் செயல்படுகிறது. அவ்வகையில் காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்று இருப்பவர்களுக்கு பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானமும், அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகமும், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகமும், வாழும் போது குருதிக்கொடையும், வாழ்நாளிற்கு பிறகு படமாய் இருப்பதை விட பாடமாய் இருப்போமென திருச்சி கிஆபெ விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறையில் உடல் தானத்திற்கு பதிவு செய்துள்ளார். மேலும்,ஆதரவற்ற அனாதை பிணங்களை மயான பூமியில் மனைவி மகளுடன் நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தன்னலமற்ற பணியினை பாராட்டி லட்சியம் படைப்பாளர் விருதினை, அகில பாரத இந்து மஹா சபா மாநில தலைவர் கல்கி ராஜசேகர், ஸ்ரீ செல்வ பந்தம் குழும இயக்குனர் மாரிமுத்து, சொந்தம் கைவிடப்பட்ட பெண்கள் காப்பக கண்காணிப்பாளர் மேரி சுஜா அருள், திண்டுக்கல் வீர தமிழர் விளையாட்டு கழகம் முனைவர் ஜோசப் செந்தில்குமார், லட்சியம் படைப்பாளர் களம் தலைவர் மணிகண்டன், செயலர் ஜனனி அழகிரி, பொருளாளர் முகமது ஜியாவுதீன் முன்னிலையில் விருதினை வழங்கினார். லட்சியம் படைப்பாளர்கள் கௌரவத் தலைவர் யோகநாதன், ஜெயபாலன், கவிஞர் பொன்மலர் மற்றும் படைப்பாளர் கள நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

