எண்ணூர் ராமகிருஷ்ணா நாலாவது தெரு பகுதியில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி கொண்டே வருகிறது. இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
கழிவுநீர் சாலையில் வழிந்து தேங்குவதால் அப்பகுதியில் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு நிலவி வரும் சுகாதார அசௌகரியத்தை உடனடியாக தீர்க்க மாநகராட்சி உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

