ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் சமத்துவபுரத்திலிருந்து கூடலூர் வரை சோளிங்கர் அரக்கோணம் பிரதான நெடுஞ்சாலையின் இருபுறமும் 500 க்கும் மேற்பட்ட காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய கடைகள் வைத்து புதன் கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க 25 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருளை வாங்கி செல்கிறார். பொருட்கள் வாங்குபவர்கள் நெடுஞ்சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு கூட்டம் கூட்டமாக பொருட்கள் வாங்குவதால் போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்படுகிறது மேலும் சில நேரங்களில் விபத்துக்கள் கூட ஏற்படுவதாக கூறப்படுகிறது .இதனை தவிர்க்கும் வகையில் ஊராட்சிக்கு சொந்தமான பகுதியில் தனி இடம் ஒதுக்கி வாரச்சந்தை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.