சென்னை, செப்.27–
காலாண்டுத் தேர்வு கடந்த 10-ந்தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவுற்றது. தேர்வுக்குப் பிறகு வழங்கப்படும் காலாண்டு விடுமுறை, பள்ளிக் கல்வியாண்டு நாட்காட்டியின் படி இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.
மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் அக்டோபர் 6-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இடைப்பட்ட காலத்தில் ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி போன்ற அரசு விடுமுறைகளும் சேர்வதால், இந்த ஆண்டு மாணவர்களுக்கு நீண்ட காலாண்டு விடுமுறை கிடைத்துள்ளது.
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் 2024-ஆம் ஆண்டு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனை மீறி விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தியால், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை எச்சரித்துள்ளது.


