அனைத்து தாய்மார்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை தருவோம் எனக்கூறி தகுதியான தாய்மார்களுக்கு மட்டும் வழங்குவது ஏன்?

அனைத்து தாய்மார்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை தருவோம் எனக்கூறி தகுதியான தாய்மார்களுக்கு மட்டும் வழங்குவது ஏன்?

அனைத்து தாய்மார்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை தருவோம் எனக்கூறி தகுதியான தாய்மார்களுக்கு மட்டும் வழங்குவது ஏன்? தாய்மார்கள் உங்களுக்கெல்லாம் கில்லி கீரையா என முன்னாள் அமைச்சர் பென்ஜமின் குற்றச்சாட்டு.

 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த V.C.மோட்டூர் பகுதியில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அம்மா பேரவை மற்றும் மத்திய ஒன்றியத்தின் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மத்திய கிழக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய ஒன்றிய அவைத்தலைவர் படியம்பாக்கம் மூர்த்தி ஆகியோர் வரவேற்பில் நடைபெற்றது கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பென்ஜமின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் மாநில அண்ணா தொழிற்சங்க துணைச்செயலாளர் பெல் தமிழரசன் திரைப்பட நடிகர் சௌந்தர்ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பென்ஜமின் திமுக அரசாங்கம் தமிழகத்தில் 4 ஆண்டுகளாகியும் இதனால் வரைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யாமல் இருப்பதால் மாணவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயத்தை ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டினார்..

மேலும் விவசாய கடன் கல்விக்கடன் உள்ளிட்டவை ரத்து செய்வோம் எனக்கூறி ஆட்சியில் அமர்ந்து சொத்து வரி மின்சாரம் வீட்டு வரி உள்ளிட்ட எண்ணற்ற மக்களின் வரிகளை உயர்த்தியதோடு குப்பைக்கு வர போட்ட ஒரே கேடுகெட்ட அரசாங்கம் இதுதான் என்று கூறினார். அதோடு இல்லாமல் மக்களிடம் வரிகளை வசூல் செய்து அதைத்தான் மகளிர் உரிமைத்தொகையாக தந்து வருகிறீர்கள். இல்லையென்றால் வேற எந்த திட்டத்தின் மூலமாக தருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி இல்லாத போது அனைத்து தாய்மார்களுக்கும் தேர்தல் வாக்குறுதியாக 1000 ரூபாய் தருவோம் என்று தெரிவித்து ஆட்சியில் அமர்ந்த பின்னர் தகுதியான தாய்மார்களுக்கு மட்டும் 1000 ரூபாய் தருவது நியாயமா? தாய்மார்கள் எல்லாம் உங்களுக்கெல்லாம் கில்லி கீரையா என கூட்டத்தில் பேசினார்..

இந்த நிகழ்ச்சியில் W.G.மோகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பூண்டி பிரகாஷ், K.P.சந்தோஷம், மாவட்ட துணைச்செயலாளர் வேதகிரி, பிற அணி மாவட்ட நிர்வாகிகள் விஜய்ஆனந்த், உமர்பாரூக், ஏழில்அரசன், சேதுராமன் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர் ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 9150223444.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook