சரவணபவன் ராஜகோபால் பிறந்தநாள்

சரவணபவன் ராஜகோபால் பிறந்தநாள்

சரவணபவன் ராஜகோபால் பிறந்தநாள்

சுவையும், தரமும், ஒழுங்கும் என்ற மூன்று அடிப்படைகளில் உலகம் முழுவதும் புகழ் பெற்ற சரவணபவன் ஓட்டலின் நிறுவனர் ராஜகோபால் இன்று (ஆகஸ்ட் 5) பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

திருச்செந்தூர் அருகே புன்னையடி கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ராஜகோபால், குடும்ப வறுமையால் 7ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து, பின்னர் வேலைக்காக சென்னை வந்தார். அப்போது ஒரு சிறிய ஹோட்டலில் கிளீனராகவே தனது தொழில்வாழ்க்கையைத் தொடங்கிய அவர், டீ மாஸ்டராக உயர்ந்து, பின்னர் மளிகைக் கடை நடத்தினார்.

 

1981-ம் ஆண்டு, “இங்க ஹோட்டல் கூட கிடையாது” என்று வாடிக்கையாளர் ஒருவர் சொன்ன வார்த்தை, ராஜகோபாலின் மனதில் ஹோட்டல் தொடங்கும் எண்ணத்தை விதைத்தது. அதே ஆண்டு அவர் ‘காமாட்சி பவன்’ ஹோட்டலை வாங்கி, அதன் பெயரை மாற்றி ‘சரவண பவன்’ எனப் பெயரிட்டார்.

 

உணவின் தரத்தில் எந்தவித சலுகையும் வழங்காமல், “சாப்பாடு சுவையாகவும், உடல்நலத்துக்கும் கேடு இல்லாததாகவும் இருக்க வேண்டும்” என்ற கொள்கையால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கினார். சட்னி, சாம்பார் உள்ளிட்ட உணவுகளை குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை புதிதாகவே சமைத்து வழங்கும் விதிமுறையையும் கொண்டுவந்தார்.

 

முதலில் நஷ்டத்தைச் சந்தித்தாலும், தரத்தில் தளர்ச்சி காட்டாத அவரது உறுதி, பின்னர் சரவணபவனை உலக அளவில் விரிவடையச் செய்தது. இன்று இந்தியாவில் 33 கிளைகளும், வெளிநாடுகளில் 22 நாடுகளில் 78 கிளைகளும் இயங்குகின்றன.

ஊழியர்களின் நலனிலும் அக்கறை கொண்டிருந்த அவர், அவர்களின் குடும்பங்களின் கல்விச் செலவு, சுகாதார வசதிகளைப் பார்த்துக் கொள்வதில் முன்னிலை வகித்தார். வாழை இலை மீது உணவு பரிமாறும் முறையை ஹோட்டல் துறையில் அறிமுகப்படுத்தியதும் இவர்தான்.

ஜோதிட நம்பிக்கை, ஆன்மிக அக்கறை ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ராஜகோபால், முருகன் கோயில்களுக்கு நன்கொடை வழங்குவதையும், பிரம்மாண்ட ஆலயங்கள் அமைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சாதாரண கிளீனராகத் தொடங்கி, உலகப்புகழ் பெற்ற உணவக சங்கிலியின் ‘அண்ணாச்சி’ என அனைவராலும் மதிக்கப்படும் நிலைக்கு உயர்ந்தவர் ராஜகோபால்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook