திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள புகழ்பெற்ற சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழா, கடந்த ஜூலை 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.
இன்று (செவ்வாய்) திருவிழாவின் ஒன்பதாம் திருநாளையொட்டி, அதிகாலை கோமதி அம்பாள் சாமியுடன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் கோலாகலமாக தேரோட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். பக்தர்களின் கோஷங்கள் மற்றும் வேதமந்திரங்கள் முழங்க பக்தி பேரொளியில் நிகழ்வு சிறப்புற்றது.
இந்நிலையில், புகழ்பெற்ற அடித்தபசு திருவிழா வரும் 7ஆம் தேதி (ஆகஸ்ட் 7) நடைபெற உள்ளது.


