சென்னை, ஆக.31 –
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) சார்பில் தற்போது சிங்கார சென்னை பயண அட்டைகள், குறிப்பிட்ட விற்பனை மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இனி பயணிகள் நேரடியாக பேருந்து கண்டக்டர்களிடமிருந்தே இவ்வட்டைகளை வாங்கும் வசதி ஏற்படுத்தும் வகையில் எம்டிசி பரிசீலித்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல், ரூ.1,000 மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள மாதாந்திர பஸ் பயண அட்டைகள் தற்போது எம்டிசி விற்பனை மையங்களில் கிடைக்கின்றன. இவ்வட்டைகள் விரைவில் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுவதுடன், பயணிகள் அவற்றை வாட்ஸ்அப் மூலம் பெறும் வசதியும் ஏற்படுத்தப்படும் எனவும் எம்டிசி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

