சென்னை | ஜனவரி 13
நேற்று (12.01.2026) சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரவுடி ஒருவர் வெடிக் கொலப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொ*லைச் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்ததாகக் கூறப்படும் கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் துரை மற்றும் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் ஆகிய இருவருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் மெமோ வழங்கியுள்ளனர்.
மருத்துவமனை போன்ற உயர் பாதுகாப்பு தேவைப்படும் பகுதியில் இவ்வாறு ஒரு கொ*லைச் சம்பவம் நடைபெற்றது குறித்து கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்,
பணியில் அலட்சியம், பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு மெமோ அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், சம்பவ நாளில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், காவல் கண்காணிப்பு உள்ளிட்டவை முழுமையாக ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் காவல்துறைக்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணை முடிவின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

