சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் ராட்விலர் நாய் தாக்கியதில் சிறுமி கடுமையாகக் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு வசிக்கும் 7 வயது சிறுமி, வீட்டு முன்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென ராட்விலர் நாய் அவளைத் தாக்கியது. சிறுமியின் முகத்தில் கொடூரமாக கடித்த அந்த நாயின் வாயை பிளந்து, கஷ்டப்பட்டு தந்தை மகளைக் காப்பாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடுமையான காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

