உரிமை கோரப்படாத அனாதை பிணங்களுக்கு மரியாதை – சமூக சேவையாளருக்கு ஆளுநர் விருது

உரிமை கோரப்படாத அனாதை பிணங்களுக்கு மரியாதை – சமூக சேவையாளருக்கு ஆளுநர் விருது

திருச்சிராப்பள்ளி, ஜன.26 :

உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிரேதங்களுக்கு மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளருக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஆளுநர் விருது வழங்கப்பட்டது.

சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது, மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

அமிர்தம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருக்கு விருது

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், யோகா ஆசிரியருமான விஜயகுமாருக்கு, சமூக சேவை – தனிநபர் பிரிவு கீழ் ஆளுநர் ரவி விருதினை வழங்கினார்.

மயான பூமியில் மனிதநேய சேவை

மயான பூமியில், மனைவி மற்றும் மகளுடன் இணைந்து உரிமை கோரப்படாத அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருவது மட்டுமின்றி,

இலவச நூலகம்

தினசரி அன்னதானம்

பாரம்பரியப் பொருட்கள் காட்சியகம்

போன்ற சேவைகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.

“மரணம் ஒன்று தான்… வலி பல” – விஜயகுமார் உருக்கம்

விருது பெற்ற பின் அவர் கூறுகையில்,

“பெயர், விலாசம் தெரியாமல் விபத்துகளில் உயிரிழந்தவர்கள், ஆற்றில் கிடைத்த உடல்கள் என பலரையும் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகிறோம்.

மலர்மாலை அணிவிக்கவும், இறுதி ஊர்வலத்திற்கும் யாரும் இல்லாதவர்களுக்கு, ஒரு மகன் அல்லது மகள் செய்வதைப் போல நாங்கள் செய்கிறோம்” என்றார்.

பெண்கள் மயான சேவையில் – சமூக மரபை உடைத்த குடும்பம்

மயானங்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற சமூக மரபை உடைத்து,

விஜயகுமார் மனைவி சித்ரா (வழக்கறிஞர்) மற்றும் மகள் கீர்த்தனா (வழக்கறிஞர் மாணவி) ஆகியோருடன் இணைந்து இந்தப் பணியை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

வறுமை – வீடற்றோர் – பிச்சைக்காரர்கள் : கள ஆய்வு அனுபவம்

வறுமை, முதுமை, மனநலப் பிரச்சினை, நோய் காரணமாக வீடற்றவர்களாகி,

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சாலையோரங்களில் வாழ்ந்து இறக்கும் பலரின் துயரங்களை கள ஆய்வின் மூலம் கண்டறிந்ததாக அவர் தெரிவித்தார்.

கொரோனா கால சேவை & மனித உடல் தானம்

கொரோனா இரண்டாம் அலைக்காலத்தில் பல உடல்களை நல்லடக்கம்

25 முறைக்கும் மேல் குருதிக்கொடை

40-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியீடு

உடல் தானம் செய்ய பதிவு – திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில்

என்றும் அவர் குறிப்பிட்டார்.

“படமாக அல்ல… பாடமாக இருப்போம்”

“வாழ்நாளுக்குப் பிறகு படமாக இருப்பதை விட, சமூகத்திற்கு ஒரு பாடமாக இருப்பதே என் வாழ்வின் இலக்கு”

— விஜயகுமார்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook