ராணிப்பேட்டை, தளவாய் பட்டடை கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் முற்றிய நெற்கதிர்கள் அறுவடை செய்ய வழியின்றி டிராக்டர், அறுவடை இயந்திர வாகனங்கள் சென்று வர வழி பாதை கேட்டு. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர் நாட்டாண்மை, கிளைத்தலைவர் ஆ. மணி தலைமையில் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், கொடைக்கல் ஊராட்சி, தளவாய்பட்டடை கிராமம் சர்வே எண் 1360-ல் ஏறி வரத்து 540 நீர்நிலை ஓடக்கரை பொது வழிப்பாதையை விவசாயிகள் பல ஆண்டுகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த வழி பாதை நடுவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் ஆக்கிரமித்து கல் கம்பங்கள் நட்டு வழியை சுருக்கி விவசாயிகள் செல்ல முடியாத வகையில் தடுத்து வருகின்றனர். பல முறை உரிய அரசு அலுவலர்களுடன் முறையிட்டும் தீர்வு இல்லை. நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெற்கதிர்கள் அறுவடை செய்ய இயலாமல் உள்ளது. விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து வி.ச தலைவர்கள் பேசினார்கள். பேச்சுவார்த்தையில் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றி விவசாயிகளுக்கு பொது வழி பாதை ஏற்படுத்தி தருவதாக வட்டாட்சியர் உறுதி அளித்துள்ளார்.
இதில் வி.ச. மாநில துணை செயலாளர் இரா.சரவணன், செயலாளர் எல்.சி. மணி, பொருளாளர் சி. இராதாகிருஷ்ணன், சோளிங்கர் வட்ட தலைவர் கே. ஜெய்சங்கர், செயலாளர் சி. தாமோதரன், நிலவு குப்புசாமி, கிளை செயலாளர் வி. மனோகரன், பொருளாளர் ஆர். தமிழரசன், துணைத் தலைவர்கள் எஸ். நடராஜன், ஆர். அன்பரசு, துணை செயலாளர்கள் ஜெ. டீக்காராமன், ஆர். ரம்யா, வார்டு உறுப்பினர் என். சாந்தி ஆகியோர் கண்டன உரையாற்றி முழக்கங்களை எழுப்பினர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் 9150223444.