திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் வாசிப்பு பழக்கம் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர்,சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
புத்தூர் கிளை நூலக பணியாளர் மீனாட்சி சுந்தரம் வாசிப்பு பழக்கம் குறித்து பேசுகையில், வாசிப்புப் பழக்கம் என்பது புத்தகம், பத்திரிகை, கட்டுரை போன்றவற்றை படிக்கும் வழக்கத்தைக் குறிக்கும். வாசிப்பு பழக்கம், அறிவை வளர்க்கிறது, கற்பனைத் திறனை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது, மற்றும் சிந்தனைத் திறனை மேம்படுத்துகிறது. மேலும், வாசிப்புப் பழக்கம் ஒருவரின் மொழித் திறனையும், தகவல் தொடர்பு திறனையும் மேம்படுத்த உதவுகிறது என்றார்.தமிழ் இலக்கியா, விவேகா, சத்தியவாகீசன், திருவானேஸ்வரர் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


