வாலாஜா வட்டம் அனந்தலை மற்றும் செங்காடு பகுதியைச் சேர்ந்த அனந்தலை மலையில் ஆனந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த மலையை பணம் முதலைகள் பல ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான முறையில் பள்ளம் தோண்டி கற்களை கொள்ளையடிக்கப் படுகின்றன. இதேபோன்று அருகிலுள்ள செம்மன்களையும் திருடி செங்கல் சூலைகளுக்கு விற்கப்படுகிறது,
அதேபோன்று நூற்றுக்கணக்கான பனை மரங்களை வேரோடு சாய்த்து மரக்கொலை செய்யப்படுகிறது. இதைக் கேட்டால் அரசு அதிகாரிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் தடுக்கப்படுகிறது. இந்து சுற்றுவட்டார முப்பதுக்கு பிற்பட்ட கிராமங்கள் கால்நடைகள் பாதிப்படைகின்றன, வீடுகள் சேதமடைகின்றன, கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது, முதியோர்களுக்கு ஒருவித சுவாச கோளாறு ஏற்படுகிறது. காற்று மாசடைகிறது, இதன் பள்ளத்தில் பல பேர் இறந்துள்ளனர். கால்நடைகளும் இறந்து உள்ளது. அதிகாரிகள் இதை அழகிய படுத்தி, அரசியல்வாதிகளுக்கு துணை போகின்றனர் பாதிக்கப்படுவது பொதுமக்களே.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்9150223444