மும்மொழி, புதிய கல்விக்கொள்கை திணிப்பை கண்டித்து மக்கள் மன்றம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்
இராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இந்தி மொழி மற்றும் புதிய கல்விக் கொள்கை திணிப்பு ஆகியவற்றை கண்டித்து மக்கள் மன்றம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது, மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் தொடர்ந்து மத்திய பாஜக அரசு செயல்படுவதாகவும், மும்மொழி மற்றும் புதிய கல்வி கொள்கை ஆகிய விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தின் மீது தன்னிச்சையாக திணிக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்.
..