ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விடுதலை – மரண தண்டனை நிரந்தரமாக ரத்து
ஏமனில் பணியாற்றி வந்த கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது.
2017-ஆம் ஆண்டு ஏமனில் ஒரு தொழிலதிபர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிமிஷா பிரியா, 2020-ஆம் ஆண்டு அங்குள்ள நீதிமன்றத்தால் மரண தண்டனைக்கு ஆளாகியிருந்தார். இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசு, மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூகத்தினரின் தீவிர முயற்சியால் தண்டனை ரத்து செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், வழக்கில் சமரசம் எட்டப்பட்டதால் ஏமன் நீதிமன்றம் இன்று (29 ஜூலை 2025) உத்தியோகபூர்வமாக மரண தண்டனையை நிரந்தரமாக ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிமிஷா பிரியாவின் விடுதலைக்கு இந்திய தூதரகம் மற்றும் கேரள அரசு தொடர்ந்து எடுத்த முயற்சிகள் பெரும் காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இந்த தீர்ப்பால், அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர்

