மதுரை :
தமிழ்நாடு சிறைத்துறையில் ஒரே சிறையில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் அதிகாரிகள், பணியாளர்களின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு, மதுரைக்கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறையில் 2-ம் நிலை வார்டனாக பணிபுரிந்து வரும் ரமேஷ் என்பவர், 3 ஆண்டுகளுக்குள் தன்னை பணி மாறுதல் செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளித்த அரசுத் தரப்பு, மனுதாரர் ஒரே மாவட்டத்தின் கீழ் உள்ள சிறைகளில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றியதால் தான் பணி மாறுதல் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரே சிறையில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிவோரின் முழுமையான பட்டியலை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


