கண்ணூர், ஜூலை 25:
கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மத்திய சிறையிலிருந்து கோவிந்தசாமி என்ற ஆயுள் தண்டனை கைதி தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதி சிறையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தேடல் நடவடிக்கையின் போது, அருகிலிருந்த ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் கோவிந்தசாமி மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், அவரை மீட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த தப்பிச் செல்லும் முயற்சி குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. சிறையில் பாதுகாப்பு மோசமாக இருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

