.வரலாறு கூறும் பணத்தாள்கள்

.வரலாறு கூறும் பணத்தாள்கள்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரலாறு கூறும் பணத்தாள்கள் நிகழ்வில் அண்டார்டிகா பாலிமர் பணத்தாள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார். வரலாற்று ஆர்வலர்கள் முகமது சுபேர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். வரலாற்று ஆர்வலர் விஜயகுமார் பேசுகையில், பணத்தாள் என்பது ஒரு நாட்டின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும், பொருளாதார நிலையையும் வெளிப்படுத்தும் . ஒவ்வொரு பணத்தாளின் வடிவமைப்பும், அதில் இடம் பெறும் உருவங்களும் இடங்களும் அந் நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, இந்திய பணத்தாள்களில் மகாத்மா காந்தி படங்கள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, பல்வேறு பாரம்பரிய இடங்கள் மற்றும் வடிவங்கள் நாட்டின் வரலாறு, கலை மற்றும் கலாச்சாரத்தை குறிக்கின்றன.

பண்டமாற்று முறையில் பொருட்கள் பரிமாறப்பட்ட காலம் போய், பணம் புழக்கத்திற்கு வந்தது. தற்போது பணமில்லா பரிவர்த்தனை என்பது பெரிய மாற்றமாகும். அவ்வகையில், பூமியில் உள்ள ஏழு கண்டங்களில் அண்டார்டிகாவும் ஒன்று. இது தென்முனையில் உள்ளது. இதன் பரப்பளவு 1.4 கோடி சதுர கி.மீ. ஐந்தாவது பெரிய கண்டம் ஆகும். 98 சதவீதம் பனிப்படலங்களால் சூழப்பட்டது. பனியின் தடிமன் 1.9 கி.மீ., அளவு கொண்டது. இதனால் இங்கு மனிதர்கள் வாழ முடியாது. சில நாடுகளின் ஆய்வு மையங்கள் மட்டுமே உள்ளன. இக்கண்டத்தில் பென்குவின், நீலத்திமிங்கலம், சீல் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன.

தென் துருவ நூற்றாண்டு 1911-2011 நினைவை முன்னிட்டு ஒரு டாலர் மதிப்பில் அண்டார்டிகா ஓவர்சீஸ் எக்ஸ்சேஞ்ச் ஆபிஸ் லிமிடெட். டி. ஜான் ஹாமில்டன் கையொப்பத்துடன் 14 டிசம்பர் 2011 அன்று பாலிமர் பணத்தாளை ஒரு டாலர் மதிப்பில் 160 × 80 மிமீ செவ்வக வடிவ அளவில் வெளியிட்டது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது. பணத்தாளின் முன்பக்கம் அண்டார்டிகாவின் கொடியுடன் பனியில் சறுக்கும் பென்குவின்கள் இடம் பெற்றுள்ளன. பணத்தாளின் பின்பக்கம் பென்குவின் படத்துடன் லத்தீன் மொழியில் தென் துருவ நூற்றாண்டு 1911-2011 ஒரு டாலர் ஆவணத்தை அண்டார்டிகா ஓவர்சீஸ் எக்ஸ்சேஞ்ச் ஆபிஸ் லிமிடெட், அஞ்சல் பெட்டி 61, கஸ்டர் WA USA 98240 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்புங்கள், டிசம்பர் 31, 2021 நள்ளிரவு வரை எந்த நேரத்திலும் ஒரு அமெரிக்க டாலர் பணத்தைத் திரும்பப் பெறலாம் என மின்னஞ்சல் முகவரியுடன் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook