தருமபுரி அருகே அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுடன், அங்கு பணியாற்றிய துணை காவல் ஆய்வாளர் (SSI) தவறான தொடர்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பின்னர், அந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்த நிலையில், சம்பவம் வெளிச்சம் பார்க்காமல் தடுக்கும் நோக்கில் பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட SSI-யை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


