திருச்சி துறையூரில் அதிர்ச்சி: புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு எஸ்.எஸ்.ஐ சஞ்சீவி தொல்லை
திருச்சி மாவட்டம் துறையூரில் போலீசார் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
துறையூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த கிருத்திகா என்ற பெண்ணிடம் சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ) சஞ்சீவி அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெண்ணை தனியாக அழைத்து சென்ற சஞ்சீவி, “நீ என் ஆசைக்கு இணங்க வேண்டும்” என்று மிரட்டியதாகவும், இதனை எதிர்த்து குரல் கொடுத்த பெண்ணை காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கிருத்திகா துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் முதல்வரிடம், மனித உரிமைகள் ஆணையத்தில், உயரதிகாரிகளிடம் முறையிட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரிடம் பாதுகாப்பு தேடி சென்ற பெண்ணுக்கே காவல்துறை அதிகாரி இவ்வாறு நடந்து கொண்டது குறித்து பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

