கோவை சூலூர் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
சென்னை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கோவையில் உள்ள கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.
ஆனால், இந்த வழக்கில் ஆரம்ப கட்ட விசாரணை பணிகளில் திறம்பட நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டின் பேரில், கோவை சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை கோவை சரக டி.ஐ.ஜி சசி மோகன் பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம், காவல்துறையினரின் விசாரணை செயல்முறைகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

