பத்து லட்சம் மதிப்புள்ள களவு போன நகைகளை 24 மணிநேரத்தில் கண்டு பிடித்த ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் சமுக ஆர்வலர்கள் பாராட்டு குற்றவாளி சிறையில் அடைப்பு
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாஷா
தெருவை சேர்ந்தவர் சுமதி 52 இவர்
நேற்று முன்தினம் மாலை தனது இரண்டு
மகன்கள் உடன் ஆற்காட்டில் நடைபெற்ற
மயான கொள்ளை திருவிழாவிற்கு சென்று
உள்ளார். பின்னர் மீண்டும் இரவு வீட்டிற்கு
வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு
உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி
அடைந்தார். பின்னர் வீட்டிற்கு உள்ளே சென்று
பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில்
வைக்கப்பட்டிருந்த ஏழு லட்சத்து இருபத்தி
ஐந்தாயிரம் ரூபாய் 3, 1/2 மூன்றரை சவரன் தங்க
நகைகள் 300 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு
போயிருப்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து
சுமதி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில்
நேற்று மதியம் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா
தலைமையில் போலீசார் ரோந்து பணியில்
ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு பைபாஸ் சாலை
தனியார் கல்லூரி அருகே தனியாக நின்று
கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை
செய்தனர்.விசாரணையில் முன்னுக்குப் பின்
பதில் கூறியதால் போலீஸ் நிலையம் அழைத்து
வந்து விசாரணை செய்தனர். விசாரணையில்
ராணிப்பேட்டை காரை பகுதியைச் சேர்ந்த சாதிக்
பாஷா (எ) இமானுவேல் (55) என்பதும் இவர்
சுமதி வீட்டில் வீட்டின் பூட்டை உடைத்து திருடியது
தெரியவந்தது .மேலும் அவரிடம் இருந்து
ரொக்கபணம்,தங்க நகை, வெள்ளி பொருட்கள்
போலீசார் பறிமுதல் செய்து சாதிக் பாஷாவை
கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 9150223444…