ஆதரவற்ற முதியவர் மரணம்!
காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!
திருச்சி வானப்பட்டறை சாலை தனியார் தங்கும் விடுதி அருகில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக
கிடைத்த தகவலின் அடிப்படையில் திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தார்கள். சம்பவ இடத்தில் முதியவர் வெள்ளை தலை முடி தாடியுடன் அழுக்கு படிந்த சட்டையுடன் இறந்து கிடந்தார்.
இறந்து போன முதியவர் பெயர் விலாசம் ஏதும் தெரியவில்லை. மேற்படி பெயர் விலாசம் தெரியாத உடலை யாரும் உரிமை கோரவில்லை. அந்நிலையில் கோட்டை காவல் நிலைய தலைமை காவலர் ராஜசேகரன்
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோக ஆசிரியர் விஜயகுமாருக்கு நல்லடக்கம் செய்ய தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி குழுமிக்கரை மயானத்தில் காவல் நிலைய தலைமை காவலர் முன்னிலையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்தார்.

