திருவள்ளூர், ஜூலை 25:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கத்தில் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவத்தில், 14 நாட்களுக்குப் பிறகு உண்மையான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலை எழுப்பியது. தொடக்கத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு நபர்கள் பிடிபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலும், சிறுமியின் வாக்குமூலத்திலும் முக்கிய திருப்பம் ஏற்பட்டது.
சிறுமி நேரடியாக உண்மை குற்றவாளியை அடையாளம் காண, போலீசார் அவனை கைது செய்துள்ளனர்.

