கோவை அரசு பொது மருத்துவமனையில், சிகிச்சை முடித்து வெளியேறிய வயதான தந்தையை ஆட்டோவிற்கு அழைத்துச் செல்ல வீல் சேர் கேட்ட மகன், நீண்ட நேரம் காத்திருந்தும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தபோதிலும், மருத்துவமனை ஊழியர்கள் வீல் சேர் வழங்க மறுத்ததாக அவர் கூறியுள்ளார். இதனால், சிகிச்சை முடித்த தந்தையை தானே இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது.
மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் சரியாக வழங்கப்படாததால், நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அவதியுறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

