பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப்போட்டி!

பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப்போட்டி!

திருச்சி மாவட்ட

பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப்போட்டி!

வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயம்பரிசு!

திருச்சியில் ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு டிசைன் ஓவியப்பள்ளி

இளம் ஓவியர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி

திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்யா குளிர் அரங்கில் ஆகஸ்ட் 23 ,24 நாட்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை இரண்டு நாட்கள் காலை 11:30 முதல் 4:30 வரை ஓவிய போட்டி நடைபெறுகிறது.

எல்கேஜி, யுகேஜி பயிலும் மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டியும்,

ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இயற்கை காட்சியில் இனிப்புகள் (கற்பனை காட்சி )என்ற தலைப்பிலும்,

நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்குங்கள் தலைப்பிலும்,

ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நம் கலாச்சாரத்தை கொண்டாடுவோம் தலைப்பிலும் ஓவிய போட்டி நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.

ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓவியத்தாள் மட்டும் வழங்குவார்கள் ஓவியத்திற்கு உரிய வண்ணங்களை போட்டியாளர்கள் கொண்டு வர வேண்டும்.

கருப்பொருள் தலைப்புக்கு உகந்த ஓவியத்தை ஒவ்வொரு பங்கேற்பாளரும் சமர்ப்பிக்க வேண்டும். ஓவியத்தை மதிப்பீடு செய்து வெற்றியாளரை நடுவர் அறிவிப்பார்.

பங்குபெறும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்றமைக்கான சான்றிதழும், வெற்றி பெறும் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்ற அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும். பரிசளிப்பு விழா 25 ஆகஸ்ட் 2025 திங்கள் மாலை நடைபெறும். பரிசளிப்பு விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன்,  திரைப்பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் உள்ளிட்டோர் பாராட்டுச் சான்றிதழையும் பரிசுகளையும் வழங்குகிறார்கள்.டிசைன் ஓவியப் பள்ளி தாளாளர் மதன் முதல்வர் நஸ்ரத் பேகம் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்துள்ளார்கள்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook