யூட்யூப் பார்த்து கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது
ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைத்த தங்க நகையை மீட்க வந்த நபர் கொடுத்த பணத்தில் ₹10,000 கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து, ராணிப்பேட்டை காவல் துறை 6 பேரை கைது செய்துள்ளது. வாலாஜாபேட்டை கடப்பரங்கையன் தெருவைச் சேர்ந்த முத்துராமன் (41) மற்றும் அவரது மனைவி கோசலை (38) ஆகியோர், கடந்த மே மாதத்தில் கோசலையின் 5 சவரன் தங்க


