சமூக செயற்பாட்டாளருக்கு லட்சியம் படைப்பாளர் விருது!

லட்சியம் படைப்பாளர் களம் சார்பில் சமூக செயற்பாட்டாளருக்கு லட்சியம் படைப்பாளர் விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. லட்சியம் படைப்பாளர் களம் நிறுவனர் சதாசிவம் தலைமை வகித்து பேசுகையில், லட்சியம் படைப்பாளர் களம் கற்றதையும் பெற்றதையும் மற்றவருக்கு வழங்கி அறிவுச்சுடர் ஏற்ற உள்ள களமாகும்.‌ வாழ்வியல் முன்னேற்றம் அனைவருக்கும் தேவை. ஒவ்வொருவருக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் லட்சியம் படைப்பாளர் களம் செயல்படுகிறது. அவ்வகையில் காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்று

Read More

நகைக்கடையில் கத்திக்காட்டி கொள்ளையடிக்க முயன்ற பெண் கைது

சென்னையில் நகைக்கடையில் கத்திக்காட்டி கொள்ளையடிக்க முயன்ற பெண் கைது சென்னை திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பான சம்பவம் இடம்பெற்றது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் 40 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருபவர் தேவராஜ் (65). நேற்று மதியம் அந்தக் கடைக்கு பர்தா அணிந்த நிலையில் வந்த பெண் ஒருவர், நகை வாங்குவது போல் நடித்து, மூன்று சவரன் தங்கச் சங்கிலி, ஒரு சவரன் வளையல், ஒரு சவரன் கம்பல் என மொத்தம்

Read More

சிறைத்துறை பணியாளர்கள் – ஒரே சிறையில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிவோரின் பட்டியல் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை : தமிழ்நாடு சிறைத்துறையில் ஒரே சிறையில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் அதிகாரிகள், பணியாளர்களின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு, மதுரைக்கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் 2-ம் நிலை வார்டனாக பணிபுரிந்து வரும் ரமேஷ் என்பவர், 3 ஆண்டுகளுக்குள் தன்னை பணி மாறுதல் செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளித்த அரசுத் தரப்பு, மனுதாரர் ஒரே மாவட்டத்தின் கீழ் உள்ள சிறைகளில் கடந்த 7

Read More

அதிகாலையில் பிரியாணி சாப்பிட வந்தவர்களை வழிப்பறி – போலீசாரை தாக்கிய கொள்ளையர்கள் கைது

சென்னை அண்ணாநகர் பகுதியில் அதிகாலையில் பிரியாணி சாப்பிட வந்த இளைஞரை வழிப்பறி செய்த இருவர், பின்னர் போலீசாரையே தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியைச் சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன், தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அண்ணாநகர் ஸ்டீபன் சாலையில் பிரியாணி சாப்பிட வந்திருந்தார். அப்போது, ஹர்ஷித் மற்றும் சல்மான் பாஷா எனும் இருவர் அவரை திடீரென தாக்கி, செல்போன் மற்றும் ரூ.2,000 பணத்தை பறித்து தப்பி சென்றனர். இந்த

Read More

சென்னையில் கட்சிக்கொடி கம்பங்கள் அகற்ற உத்தரவு

சென்னையில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற நீதிமன்றம் வழங்கிய உத்தரவினை தொடர்ந்து, மாநகராட்சி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, வரும் 14ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கட்சியினரே தங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றப்படாவிட்டால், மாநகராட்சி ஊழியர்களை கொண்டு கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு, அதற்கான செலவுத்தொகை அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, பொதுமக்கள் நலன் மற்றும் நகரின் அழகியமைப்பை பேணும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளதாக

Read More

சென்னையில் புதிய நடைமுறை: அபராதம் செலுத்தினால்தான் இன்சூரன்ஸ் புதுப்பிப்பு

சென்னை மாநகர காவல்துறை, வாகன ஓட்டிகளுக்கான புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி, போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையை முழுமையாகச் செலுத்தினால்தான், இனி வாகனங்களின் இன்சூரன்ஸ் புதுப்பிக்க அனுமதி வழங்கப்படும். தற்போது சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான அபராதத் தொகை நிலுவையில் உள்ளதாகவும், இதனை வசூல் செய்வதற்காக காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை

Read More

வீட்டுமனை மோசடி – சகோதரிகள் கைது!

சென்னை அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டுமனை வழங்குவதாக கூறி ஏமாற்றிய வழக்கில் இரு சகோதரிகள் கைது செய்யப்பட்டனர். Lakshmi Classic Homes Pvt. Ltd., என்ற தனியார் நிறுவனத்தை நடத்திவந்த அம்சவேனி மற்றும் ஸ்ரீலட்சுமி ஆகிய சகோதரிகள், 26 பேரிடமிருந்து சுமார் ரூ.3.71 கோடி முதலீடு பெற்றனர். வீட்டுமனை வழங்குவதாக நம்பிக்கை அளித்தும், நிலம் தரப்படாமல் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து,

Read More

அரசு மருத்துவமனையில் நோயாளி தந்தையை வீல் சேர் இல்லாமல் இழுத்துச் சென்ற மகன்

கோவை அரசு பொது மருத்துவமனையில், சிகிச்சை முடித்து வெளியேறிய வயதான தந்தையை ஆட்டோவிற்கு அழைத்துச் செல்ல வீல் சேர் கேட்ட மகன், நீண்ட நேரம் காத்திருந்தும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தபோதிலும், மருத்துவமனை ஊழியர்கள் வீல் சேர் வழங்க மறுத்ததாக அவர் கூறியுள்ளார். இதனால், சிகிச்சை முடித்த தந்தையை தானே இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் சரியாக வழங்கப்படாததால், நோயாளிகள்

Read More

வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் விருது

ராணிப்பேட்டை: “தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலைய விருது” வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை, காவல் நிலையம் சார்பாக ஆற்காடு கிராமிய காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா, சென்னையில் நடைபெற்ற விழாவில் காவல்துறை தலைமை இயக்குநரிடமிருந்து பெற்றார். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன்ஜமால், ஆய்வாளர் சாலமோன் ராஜாவை வாழ்த்தி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் இமயவர்மன் கலந்து கொண்டார். செய்தி:ஆர்.ஜே.சுரேஷ்

Read More

Facebook