சென்னையில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற நீதிமன்றம் வழங்கிய உத்தரவினை தொடர்ந்து, மாநகராட்சி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, வரும் 14ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கட்சியினரே தங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றப்படாவிட்டால், மாநகராட்சி ஊழியர்களை கொண்டு கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு, அதற்கான செலவுத்தொகை அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, பொதுமக்கள் நலன் மற்றும் நகரின் அழகியமைப்பை பேணும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.


