வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காகிதப்பட்டறை அருகே, பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா, சிறப்பு பூஜைகள், கணபதி ஓமம் உள்ளிட்ட பூஜைகள் செய்து கோலாகலமாக பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா மாவட்டத் தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி திறந்து கட்சித் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள், பழங்கள், மற்றும் குளிர்பானங்கள் வழங்கி திறப்பு விழாவானது கோலாகலமாக சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோட்ட பொறுப்பாளர் குணசேகரன், வர்த்தக அணி மாநில செயலாளர் இளங்கோ, மாவட்ட துணைத் தலைவர் ரூபாவதி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் எம்.கே.சூர்யா, துணைத் தலைவர் ஜெயமூர்த்தி, மாவட்ட செயலாளர் ரமணா, காட்பாடி தெற்கு மண்டல தலைவர் நந்தகுமார், சரவணகுமார், சத்துவாச்சாரி ஜெகன், வி.எஸ்.சி.வெங்கடேசன், சக்கரவர்த்தி, அம்மன் சிவராமன், சத்துவாச்சாரி ஜெய் ஸ்ரீகாந்த், நெட் சென்டர் உதயகுமார், தினேஷ், பிச்சாண்டி, மூர்த்தி, சங்கர், சுமதி, மனோகர், சுகுணா, சுகன்யா, ஜெய்சங்கர், நந்தகுமார், செல்வராஜ், ராகவ கிருஷ்ணா, அசோக், மதியழகன், சுகுமார் சதீஷ்குமார், ஜாபர், ஜபீர், உட்பட ஏராளமான பா.ஜ.க.வினர் மற்றும் இந்து அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்
.