தமிழகத்தில் ஏழு இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அலுவலகங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை. தீயணைப்புத் துறை மற்றும்மீட்பு பணிகள் துறை இயக்குனர். சீமா அகர்வால்.
வடமேற்கு மண்டலத்திற்குட்பட்ட தீயணைப்பு நிலையங்களின் வருடாந்திர ஆய்வு கூட்டம். இன்று வேலூர் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில் தீயணைப்புத் துறையில்
பயன்படுத்தப்படும் வாகனங்கள், கருவிகள், அலுவலக கோப்புகள், கட்டிட வசதிகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமா அகர்வால், வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டும் வருகிறது. வரும் இரண்டு மாதங்களுக்கு இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படும். மேலும்தேசிய பேரிடர் மீட்பு படையுடன் இணைந்து மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் தீயணைப்பு துறையினரும் இணைந்து பேரிடர் காலங்களில் மீட்பது தொடர்பானதேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கேட்கும் பல்வேறு தீயணைப்பு உபகரணம் தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப நவீன கருவிகள் தீயணைப்பு துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் அடுக்குமாடி கட்டிடங்களில் போதுமான தீ தடுப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட பிறகே கட்டிட அனுமதி தீயணைப்பு துறையால் வழங்கப்பட்டு வருகிறது. சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களில் வெடி விபத்துக்கும் தீ விபத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளது, இருந்த போதிலும் தீ விபத்து மேலும் பரவாமல் தடுப்பதற்கும் தீயை அணைப்பதற்கும் தீயணைப்பு துறையினர் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தீயணைப்பு துறையில் உள்ள 600 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது மீதமுள்ள காலி பணியிடங்கள் நிரப்ப தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார். பின்னர் ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டால் தீ தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்த ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ். 9150223444.

