புது டெல்லி:
ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவை பெருமைப்பட வைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தற்போது புதிய கௌரவ பொறுப்பை பெற்றுள்ளார்.
அவருக்கு இந்திய ராணுவத்தின் பிராந்திய பிரிவில் “கௌரவ லெப்டினன்ட் கர்னல்” பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பெருமையைப் பெற்றதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நீரஜ் சோப்ராவை வாழ்த்தி,
“நீரஜ் சோப்ரா விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, நாட்டிற்கும் சிறந்த முறையில் சேவை செய்து வருகிறார்” என்று பாராட்டினார்.
இந்த நியமனம் மூலம், விளையாட்டுத் துறையிலும் ராணுவத்திலும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் நாயகனாக நீரஜ் சோப்ரா மேலும் உயர்ந்துள்ளார்.



