வியாபாரிகள் சங்க நிர்வாகியின் தாயார் காலமானார்: பாலகுருசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி.

வியாபாரிகள் சங்க நிர்வாகியின் தாயார் காலமானார்: பாலகுருசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி.

வியாபாரிகள் சங்க நிர்வாகியின் தாயார் காலமானார்: பாலகுருசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி.

 

 

சென்னை, ஏப். 2-

வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்க நிர்வாகியின் தாயார் மறைவுக்கு சங்க நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மறைவு:

சென்னை காலிங்கராயன் தெருவைச் சேர்ந்தவர் A.V.கருணாகரன். இவர் வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் முக்கிய நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவருடைய தாயார் V.சண்முகத்தாய் (வயது 83).

வயது முதிர்வு காரணமாக இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த சண்முகத்தாய், நேற்று (புதன்கிழமை) மதியம் 1.00 மணியளவில் இயற்கை எய்தினார்.

நிர்வாகிகள் அஞ்சலி:

அன்னாரின் மறைவுச் செய்தியை அறிந்த வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தினர் அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் சங்கத்தின் தலைவர் A.S.J.பாலகுருசாமி, பொதுச் செயலாளர் K.ராமகிருஷ்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook