இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையத்தை திறந்து வைக்கிறார். இதுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார்.
புதிய முனையத்தில் 4 நுழைவு வாயில்கள், 3 ஏரோ பிரிட்ஜ்கள் மற்றும் 21 செக்-இன் கவுன்ட்டர்கள் உட்பட உயர் தர வசதிகள் உள்ளன. இதனால் விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன், ஒரு மணி நேரத்திற்கு 156-லிருந்து 1,400 பயணிகளாக உயர்ந்துள்ளது.

