சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சில நாட்களாக சென்னையின் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுகாலம் முடிந்த பின்னர், இன்று மாலை 6.15 மணிக்கு அவர் வீடு திரும்பும் திட்டமிட்டு உள்ளார். அவரது உடல்நிலை நலமாக உள்ளதாகவும், மருத்துவ குழுவின் பரிந்துரையின் பேரில் வீடு திரும்புவதாகவும் கூறப்படுகிறது.
முதலமைச்சரின் ஆரோக்கியம் குறித்து அவரது குடும்பத்தினரும், அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவரின் வீடு திரும்பும் தகவல், தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

