கனிமவளக் கொள்ளை…   நடவடிக்கை எடுக்காவிட்டால்  போராட்டம்  நடத்த பொதுமக்கள் தீவிரம்…

கனிமவளக் கொள்ளை… நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த பொதுமக்கள் தீவிரம்…

ராணிப்பேட்டை மாவட்ட

அனந்தலை மலையில் அரசால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அளவுக்கு அதிகமாக முறைகேடாக நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த பொதுமக்கள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் பரவிவருகிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் முக்கிய புவியியல் அடையாளங்களாக கிழக்கு தொடர்ச்சி மலைகளும்,மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக அமைந்தள்ள அதன் தொடர் மலைக் குன்றுகளுமே உள்ளது.இதில் கருங்கல் பாறைகள்,படிகப்பாறைகள், சார்னோகைட், தகட்டுப்பாறையான கோண்டாலைட் ஆகிய பல்வேறு வகையான பாறைகளைக் கொண்ட மலைத்தொடராக கிழக்குத் தொடர்ச்சி மலைகள் உள்ளது.சுண்ணாம்புக்கல், பாக்சைட், இரும்புத்தாது போன்ற கனிம வளங்களும் நிறைந்துள்ளது.

அதன் படி அனந்தலை ஊராட்சியில் அமைந்துள்ள சுமார் 800 ஏக்கர் பரப்பிலான மலையில் உள்ள பாறைகளை தனியார் கல் குவாரி உரிமையாளர்கள் அரசு விதிகளை மீறி, அதிக அளவிலான வெடி பொருள்களை பயன்படுத்தி இரவு பகலாக பாறைகளை தகர்த்து வருகின்றனர். இதனால் ஏற்படும் அதிர்வுகளால் அனந்தலை, முசிறி, செங்காடு, மோட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் கல் குவாரிகளில் இருந்து வெளியேறும் துகள்கள் காற்றின் மூலம் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவு வரை பயிரிடப்பட்டுள்ள விளை பயிர்கள் மீது படிந்துள்ளது. இதனால் விளைச்சல் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகி கால்நடைகளும் இறந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அனந்தலை மலையை சுற்றியுள்ள கசிவுநீர்க் குட்டைகள் மூடப்படுவதையும், மலையை சுற்றியுள்ள பனை மரங்களை அழித்து செம்மண் மலையை சுரண்டுவதையும் மேலும் மலையின் மீதுள்ள பழமை வாய்ந்த ஆனந்தீஸ்வரர் கோயில் சிதைக்கப்பட்டுவருவதாகவும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் கல் குவாரி களையும் உடனடியாக தடுத்து நிறுத்தி சுற்றுச்சூழலையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். மேலும் முறைகேடாக நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த பொதுமக்கள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் பரவிவருகிறது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் (9150223444).

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook