பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு, பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக மீரா மிதுனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்றபோது, மீரா மிதுனை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


