வேலூரில் குடியரசுத் தலைவர் வருகை
ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் தியான மண்டபம் திறப்பு | 1200 போலீசார் பாதுகாப்பு
வேலூர், டிச.17:
இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வேலூருக்கு வருகை தருகிறார். வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தை அவர் திறந்து வைக்கிறார்.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு வேலூர் நகரம் முழுவதும் மற்றும் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1200 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


