தாயும் மகளும் மருத்துவக் கல்லூரி மாணவிகள்!

தாயும் மகளும் மருத்துவக் கல்லூரி மாணவிகள்!

சென்னை:

தமிழகத்தில் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளி பிரிவுக்கான நேர்முக கலந்தாய்வு சென்னை நேரில் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 49 வயதான அமுதவல்லி கலந்து கொண்டார். அவருக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு இடம் கிடைத்துள்ளது.

அமுதவல்லியின் மகள் சம்யுக்தா கிருபாயிணி, நீட் தேர்வுக்காக பாடங்களைப் பயின்றபோது, அவற்றை தனது தாயிடம் பகிர்ந்து வந்துள்ளார். இதனால் ஊக்கமடைந்த அமுதவல்லி நீட் தேர்வு எழுத, 147 மதிப்பெண்கள் பெற்றார். அதே சமயம், 460 மதிப்பெண் பெற்ற அவரது மகளும் மருத்துவக் கல்லூரி சீட் பெற்றுள்ளார்.

இதன் மூலம் தாய், மகள் இருவரும் ஒரே நேரத்தில் மருத்துவக் கல்லூரியில் பயிலும் அபூர்வ வாய்ப்பு கிடைத்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook