சென்னை: தமிழ் திரையுலகில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் மக்களின் மனதில் இடம்பிடித்த குணச்சித்திர நடிகர் மதன் பாப் (இயற்பெயர்: கிருஷ்ணமூர்த்தி) காலமானார். இவர் 71 வயதாகும்.
1953 அக்டோபர் 19 அன்று பிறந்த மதன் பாப், இசையமைப்பாளராகத் தான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் நடிகராக மாறி நகைச்சுவை, குணச்சித்திரம், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தினார்.
1984 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நீங்கள் கேட்டவை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரை உலகிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தன் தனித்துவமான பாணியால் மக்களை மகிழ்வித்த மதன் பாப் மறைவால் திரையுலகம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

