ராணிப்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கடும் கண்டன ஆர்ப்பாட்டம்!
உச்சநீதிமன்ற தலைமை நீதியரசரை தாக்க முயன்றவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மத்திய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மாவட்டச் செயலாளர் சீ.ம. ரமேஷ்கர்ணா தலைமையில் முத்துகடை பேருந்து நிலையத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பிஆர். கவாய் அவர்களை தாக்க முயன்ற சனாதனி ராகேஷ் கிஷோர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (NSA) கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினர்.
அதேபோல், சென்னை உயர்நீதிமன்ற சாலையில் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களின் காரை வழிமறித்து வன்முறையில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் கைக்கூலி ராஜீவ்காந்தி என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல பொறுப்பாளர்கள், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு “நீதிக்கெதிரான தாக்குதல்களை நிறுத்து!” எனக் கோஷமிட்டனர்.

🗞️ செய்தி: ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்.ஜே. சுரேஷ்
📞 விளம்பர மற்றும் செய்தி தொடர்புக்கு: 91502 23444

