உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் தாக்குதல் – சமூகத்தில் அதிர்ச்சி!

உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் தாக்குதல் – சமூகத்தில் அதிர்ச்சி!

சென்னை உயர் நீதிமன்றம் பார் கவுன்சிலிங் அருகாமையில் வழக்கறிஞர் ஒருவர் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இதேபோன்று, கடந்த மாதம் தமிழ்நாடு காவல்துறை தலைமையகம் அருகாமையிலும் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி இருந்தது. தொடர்ந்து இவ்வாறு பொது இடங்களில், அதுவும் காவல்துறை மற்றும் நீதித்துறை வளாகங்களின் அருகே கூட பாதுகாப்பு இல்லை என்பதைக் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அரசியல் பலம், பண பலம் கொண்ட சிலர் “நீதித்துறை அல்லது காவல்துறை என்றாலும் சமாளிக்கலாம்” என்ற மனப்பான்மையுடன் நடந்து கொள்வது ஆபத்தானது எனவும், அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

சமூக ஆர்வலர்கள், இந்த சம்பவங்களை நீதிமன்றமே நேரடியாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook