சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பல ஆண்டுகளாக குவிக்கப்பட்டு வந்த திடக்கழிவுகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட பயோமைனிங் முறையின் மூலம் இதுவரை சுமார் 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
மொத்தம் 66.52 லட்சம் டன் குப்பைகளை அகற்றும் பணியில், நிலம் மீட்கப்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலை பசுமையாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட நிலத்தில் பாதுகாப்பு வேலி அமைத்து, பாசன வசதியுடன் இதுவரை சுமார் 15,000 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதோடு, எதிர்காலத்தில் கொடுங்கையூர் பகுதி பசுமையாக மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


